1800 மாணவர்களின் கல்வி செலவை ஏற்கிறார் விஷால்

கன்னட சூப்பர் ஸ்டார் நடிகர் புனித் ராஜ்குமார் திடீரென கார்டியாக் அரெஸ்ட் காரணமாக உயிரிழந்தார். அவரது திடீர் மறைவு கன்னட திரை உலகை மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்தியாவையுமே உலுக்கியது.அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த லட்சக்கணக்கில் மக்கள் ஒன்று திரண்டனர்.
அவர் நடிகராக மட்டுமின்றி பன்முகத் திறமையானவராக இருந்து வந்தார்.

மேலும் பல்வேறு சமூக நலப் பணிகளிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். 45 இலவசப் பள்ளிகள், 26 ஆதரவற்றோர் இல்லங்கள், 19 கோசாலை மற்றும் 16 முதியோர் இல்லங்கள் ஆகியவற்றை நடத்தி வந்தார். 1800 மாணவர்களின் கல்விச் செலவையும் ஏற்றிருந்தார்.
இந்நிலையில், புனித் ராஜ்குமார் உதவியில் படிக்கும், 1800 மாணவர்களின் கல்விச் செலவை அடுத்தாண்டு முதல் தமிழ் திரையுலகின் முண்ணனி கதாநாயகன் விஷால் தான் ஏற்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

மத்திய அரசு சார்பில் பள்ளி பயிலும் மாணவர்களுக்கு மாதம் தோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 1 முதல் 10ம் வகுப்பு வரை மாணவர்கள் அரசு வழங்கும்உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய நல ஆணையர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் “இந்திய அரசின், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ், பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களி்ன் 1ம் வகுப்பு முதல் தொழில் முறை படிப்புகள் வரை பயிலும் குழந்தைகளுக்கு 2021-2022ம் நிதியாண்டில் ரூ.250 முதல் ரூ.15000 வரை கல்வி உதவித்தொகை பெறுவதற்காக மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இந்த உதவித் தொகையை பெற http://scholarship.gov.in என்கிற தேசிய கல்வி உதவித் தொகை வலைத்தளத்தில், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஒவ்வொரு மாணவரும், தங்களுக்கென தனியாக தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் மைய வங்கி அமைப்பு என்ற தொழில்நுட்ப முறையில் சேமிப்புக் கணக்கு தொடங்க வேண்டும். அவர்கள் ஆதார் எண்ணை வங்கி சேமிப்பு கணக்குடன் இணைத்திருக்க வேண்டும். குறிப்பிட்ட வழிகாட்டுதலின் படி படித்துக் கொண்டிருக்கும் கல்வி நிறுவனங்களின் பதிவு செய்யப்பட்ட முகவரியில் இருந்து மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
இந்த மாவட்ட மாணவ மாணவிகளுக்கு மகிழ்ச்சி செய்தி!

600 நாட்களுக்கு பிறகு இன்று பள்ளிகள் திறப்பதாக இருந்தது ஆனால் பல மாவட்டங்களில் கன மழை பெய்து கொண்டிருப்பதால்
வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நெல்லை, திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு அம்மாவட்ட கலெக்டர் விடுமுறை அளித்துள்ளார்கள்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

கனமழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

- மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன்

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

கனமழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

- மாவட்ட ஆட்சியர் விஷ்ணு

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
மழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என...

மழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST |  PREV  ( Page 86 of 86 )   NEXT | LAST